நல்லம்பள்ளி அருகே சிறுமியை திருமணம் செய்த விவசாயி மீது வழக்கு

Update: 2023-04-01 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 26). விவசாயி. இவருக்கும் 17 வயது சிறுமிக்கும் கோவிலில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நல்லம்பள்ளி ஊர் நல அலுவலர் மல்லிகா சம்பவ பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடைபெற்று இருப்பது உறுதியானது. வேடியப்பனின் பெற்றோர், சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து இந்த திருமணத்தை நடத்தி இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வேடியப்பன் மீது குழந்தை திருமண தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்