தர்மபுரி:
தர்மபுரி ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 27). இவருடைய கணவர் பிரபாகரன். இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் லட்சுமிக்கு தெரியாமல், பிரபாகர் வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் லட்சுமிக்கு குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல், தாக்கி துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து லட்சுமி தர்மபுரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பிரபாகரன் மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.