நல்லம்பள்ளி அருகே உள்ள ஊத்துபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). தொழிலாளி. இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு 17 வயது சிறுமியுடன் குழந்தை திருமணம் நடந்தது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி இதுபற்றி சமூக நலத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட சமூக நல அலுவலகத்தை சேர்ந்த அலுவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடத்தப்பட்டிருப்பது உறுதியானது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் சிறுமியின் கணவர் சுரேஷ், அவருடைய பெற்றோர், சிறுமியின் பெற்றோர் என 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.