வீட்டில் ஆடு நுழைந்ததை தட்டி கேட்ட தம்பதி மீது தாக்குதல்-2 பேர் மீது வழக்குப்பதிவு

Update: 2023-01-19 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி சோலைக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 49). லாரி டிரைவரான இவருக்கும், அருகே வசிக்கும் பொன்னுசாமி (58) என்பவருக்கும் இடையே கிணற்று திட்டு தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டது. இந்த நிலையில் வீட்டில் ஆடு நுழைந்ததாக இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சந்திரன், அவருடைய மனைவி ஆகியோரை பொன்னுசாமி, முனியப்பன் (38) ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் பொன்னுசாமி, முனியப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்