ஆடு மேய்க்கும் தொழிலாளியை காதில் வெட்டியவர் மீது வழக்கு
ஆடு மேய்க்கும் தொழிலாளியை காதில் வெட்டியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 40). இவரது தம்பி காளிராஜ் (30). இவர் அதே ஊரில் ஆடு மேய்க்கும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று காளிராஜ் மது போதையில் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் அங்கு வந்து ஏன் வேலைக்கு வரவில்லை? என்று தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த கத்தியால் காளிராஜை காது பகுதியில் வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ஒழுங்காக ஆடு மேய்க்க வரவில்லை என்றால் உன்னை வெட்டி கொலை செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து சென்றாராம். இதுகுறித்து பொன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.