இருதரப்பினர் மோதல்

ஓசூர் அருகே இருதரப்பினர் மோதல் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-01 18:45 GMT

ஓசூர்

ஓசூர் அருகேயுள்ள தோட்டகிரியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது32). டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (40). உறவினர்களான இவர்களுக்குள் நில தகராறு இருந்து வருகிறது. இது தொடர்பாக, நேற்று முன்தினம் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 2 தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுதொடர்பாக இருதரப்பினரும் ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் நாகராஜ், ரோஜா, அனுஜா, லோகேஷ் (35), சிவக்குமார் (32), கோபி (36), மஞ்சு (34) ஆகிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்