மொரப்பூர்:
கடத்தூர் அருகே உள்ள நல்லகுட்லஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராமன் (வயது 65). இவருடைய மகன்கள் நாராயணன் (40), வேல்முருகன் (34). இவர்களுக்கிடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று ராமன் தனது நிலத்தில் நெல் நடவு பணியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கும், அவருடைய மகன்களுக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து கடத்தூர் போலீசில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தந்தை, மகன்கள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.