மாவட்டத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜனதாவினர் 500 பேர் மீது வழக்கு

Update: 2022-11-16 18:45 GMT

தர்மபுரி:

பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதா சார்பில் நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் முழுவதும் 23 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாவட்ட தலைவர் பாஸ்கர் உள்பட பா.ஜனதாவினர் 500 பேர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரியில் 45 பேர், நல்லம்பள்ளியில் 75 பேர், மதிகோன்பாளையத்தில் 23 பேர், கிருஷ்ணாபுரத்தில் 32 பேர், அரூரில் 30 பேர், கோட்டப்பட்டியில் 20 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்