வீட்டில் மது குடித்ததை தட்டி கேட்டதால் வாலிபருக்கு கத்திக்குத்து; அண்ணன் மீது வழக்கு
வீட்டில் மது குடித்ததை தட்டி கேட்டதால் வாலிபரை கத்தியால் குத்திய அண்ணன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் கொல்லர் தெருவை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 25). இவருடைய அண்ணன் ஹரீஷ்குமார் (34). சம்பவத்தன்று ஹரீஷ்குமார் நண்பர்கள் 2 பேருடன் தனது வீட்டில் மது அருந்தி கொண்டிருந்தார். இதனை விஷ்ணு தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹரீஷ்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து விஷ்ணுவை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் ஹரீஷ்குமார் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.