வாலிபரை கத்தியால் குத்திய மகன்- தாய் மீது வழக்கு
வாலிபரை கத்தியால் குத்திய மகன்- தாய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஊரணங்குடி ஊராட்சி புறகரை கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் அருண் (வயது24). இவரும் இதே ஊரை சேர்ந்த முருகேசன் மகன் சிவசக்தி மணிகண்டன் (21) என்பவரும் நெருங்கிய உறவினர்கள். இந்தநிலையில் அருண் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தபோது சிவசக்தி மணிகண்டன் அருணின் காலில் கத்தியால் குத்தினாராம். அவரது தாய் சகுந்தலா தாக்கினாராம். இதில் அருண் நிலைதடுமாறி கீழே விழுந்த தாக கூறப்படுகிறது. உடனே அவர் சிகிச்சைக்காக ராம நாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்க்கப்பட்டார். அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகன், தாய் மீதும் சகுந்தலா கொடுத்த புகாரின் அடிப்படையில் அருண் மீதும் திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.