ஓசூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு

ஓசூரில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2022-06-20 17:58 GMT

ஓசூர்:

தர்மபுரி மாவட்டம் தளவாய்அள்ளியை சேர்ந்தவர் வல்லரசு (வயது22). இவரும் ஓசூர் பஸ்தி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். கடந்த 10-ந் தேதி அவர்கள் ஓசூர் பாரதி நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இது தொடர்பாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் விஜயலட்சுமி, ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் அட்கோ போலீசார், வல்லரசு மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்