ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்

ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-06-16 17:22 GMT

காரைக்குடி,

ஆக்கிரமிப்பை அகற்றிய அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆக்கிரமிப்பு

காரைக்குடி கழனிவாசல் - உ.சிறுவயல் சாலையில் சங்கு சமுத்திர கண்மாய் அருகே நீர் நிலை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து இரவோடு இரவாக கட்டப்பட்ட வீடு குறித்து தாலுகா அலுவலகத்திற்கு புகார் வந்தது.

அதன் பேரில் தாசில்தார் மாணிக்கவாசகம், மண்டல துணை தாசில்தார் யுவராஜா, வருவாய் ஆய்வாளர் ஹைதர் அலி, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் மற்றும் போலீசார் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை அகற்றினர். அப்போது சிலர் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் குன்றக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமொழி அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த கழனிவாசல் பகுதியை சேர்ந்த மீனாம்பாள் (வயது 55), சுதர்சன் (23), லட்சுமணன் (65), அழகன் ( 68) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்