பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பாப்பம்பாடியை சேர்ந்தவர் மதியழகன் (வயது 60), விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மின் மோட்டார் பழுதானது. உடனே அதனை அங்கிருந்த கிழங்கு மில் குடோனில் வைத்து இருந்தார். இதனை மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அரூர் அருகே கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (48) என்பவர் திருடி சென்று தனது பாத்திர கடையில் வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் பாத்திரக்கடை உரிமையாளர் வெங்கடேசன் மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.