மத்தூர்:
மத்தூர் அருகே அங்கம்பட்டி அடுத்த செவத்தான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவருடைய மனைவி கீதாஞ்சலி (வயது 21). வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தை சிவாவின் குடும்பத்தினர் ஏற்று கொள்ளவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களாக சிவா, அவருடைய குடும்பத்தினர் கீதாஞ்சலியை கொடுமைப்படுத்தியதாகவும், சாதி பெயரை கூறி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி கீதாஞ்சலியை சிவா தரப்பினர் தாக்கினர். இதுதொடர்பாக கீதாஞ்சலி கொடுத்த புகாரின்பேரில் மத்தூர் போலீசார் சிவா (23), அவருடைய தந்தை கிருஷ்ணன் (52), தாய் கஸ்தூரி உள்பட மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.