காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 45). தேவர்முக்குளம் பகுதியை சேர்ந்தவர் சேட்டு (48). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாபு தனது வீட்டை விற்பனை செய்வது தொடர்பாக சேட்டுவிடம் கூறினார். இதையடுத்து சேட்டு, பாபுவின் வீட்டை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்தார்.
இதற்கிடையே பாபு வீட்டை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டார். கடந்த 4-ந் தேதி இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் பாபு தாக்கப்பட்டார். இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின்பேரில் சேட்டு மற்றும் மேலும் ஒருவர் மீது காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சேட்டு கொடுத்த மற்றொரு புகாரின்பேரில் பாபு (45), முருகன் (43) உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.