கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களை போலீசார் கைது செய்தனர். அவ்வாறு கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் வந்த 46 பேர், நிபந்தனையை கடைபிடிக்காமலும் கோர்ட்டில் ஆஜர் ஆகாமலும் இருந்து வந்தனர். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தாலுகா, ஓசூர் டவுன், தேன்கனிக்கோட்டை போலீசார் மொத்தம் 46 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.