பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே உள்ள பூதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன்கள் கோவிந்தசாமி (வயது 47), சக்திவேல் (49). விவசாயிகளான இருவரும் பொதுவாக உள்ள விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதுதொடர்பாக அண்ணன், தம்பி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த ்நிலையில் கோவிந்தசாமியின் கறவை மாடு ஒன்று நேற்று செத்தது.
இதற்கிடையே மாடு குடித்த தண்ணீரில் அண்ணன் சக்திவேல் விஷம் கலந்து விட்டதாகவும் விஷம் கலந்த தண்ணீரை குடித்ததால் மாடு இறந்துவிட்டதாக கோவிந்தசாமி பாப்பாரப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.