தூக்குப்போட்டு தச்சு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தச்சு தொழிலாளி தற்கொலை;
விழுப்புரம்
விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 46). தச்சு தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரது மனைவி அம்பிகா கண்டித்ததால் மனமுடைந்த பாபு, தனது வீட்டில் மின்விசிறியில் லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.