ராமநாதபுரம் அருகே உள்ள மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 64). இவர் நேற்று முன்தினம் மாலை மரப்பாலம் பஸ் நிறுத்தம் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது தேவிபட்டினத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட குருசாமி பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த சென்னை திருவேற்காடு ஸ்ரீகிருஷ்ணாநகரை சேர்ந்த ஆறுமுகம் (48) என்பவரை தேடிவருகின்றனர்.