சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து; உதவியாளர் படுகாயம்
பஞ்சம்பட்டி பிரிவு அருகே சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் உதவியாளர் படுகாயமடைந்தார்.
திண்டுக்கல்லில் இருந்து வாடிப்பட்டிக்கு ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று நேற்று மாலை புறப்பட்ட்து. லாரியை வாடிப்பட்டியை சேர்ந்த சதீஷ் (வயது 27) என்பவர் ஓட்டினார். உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த சோலை (42) சென்றார்.
திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் பஞ்சம்பட்டி பிரிவு அருகே சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உதவியாளர் சோலை படுகாயமடைந்தார். டிரைவர் சதீஷ் காயமின்றி உயிர் தப்பினார். அக்கம்பக்கத்தினர் சோலையை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.