கன்டெய்னர் லாரி மீது சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் பலி
பள்ளிகொண்டா அருகே நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது சரக்கு ஆட்டோ மோதி டிரைவர் இறந்தார்.;
அணைக்கட்டு
அணைக்கட்டு தாலுகா சதுப்பேரி செங்கண் தெரு அன்பு நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் விஜய் (வயது 33) சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்துள்ளார்.
பெங்களூருவுக்கு சரக்குகளை ஏற்றிச்சென்ற அவர் அதனை இறக்கிவிட்டு மீண்டும திரும்பிக் கொண்டிருந்தார்.
பள்ளிகொண்டாவை அடுத்து இறைவன்காடு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது தூக்க கலக்கத்தில் எதிரே நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது சரக்கு ஆட்டோ பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் விஜய் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று விஜய் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.