பயனாளிகளுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி
சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் பயனாளிகளுக்கு தொழில் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.;
தட்டார்மடம்:
சாத்தான்குளம் யூனியன் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்ட இணை மானிய நிதி மூலம் வங்கி கடன் பெற்ற பயனாளிகளுககு தொழில் மேம்பாட்டு பயிற்சி 3 நாட்கள் நடைபெற்றது. சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட செயல் அலுவலர்கள் செல்வகுமார், சுந்தரராஜன் ஆகியோர் பயிற்சிக்கான நோக்கம் மற்றும் திட்டம் பற்றி எடுத்துரைத்தனர். தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன பயிற்றுநர், பயனாளிகளுக்கு பயிற்சி தொழில் மேம்பாட்டு பயிற்சி அளித்தார். பயிற்சியில் தொழிலில் ஏற்படும் சிக்கல்கள், அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள், சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. வாழ்ந்து காட்டுவோம் திட்ட பணியாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.