கார் கண்ணாடியை உடைத்து செல்போன், பணம் திருட்டு

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் கார் கண்ணாடியை உடைத்து செல்போன், பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2023-08-21 18:30 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், கவுரிவாக்கம் சாய்பாபா கோவில் தெருவை சேர்ந்தவர் பரதன் (வயது 58). இவர் மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தனது குடும்பத்தினருடன் காரில் வந்தார். அப்போது அவர் காரை வெளியே நிறுத்தி விட்டு கோவிலின் உள்ளே குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் சாமி தரிசனம் முடிந்து பரதன் வெளியே வந்த போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் காரில் இருந்த செல்போன், ரூ.12 ஆயிரம், ஆதார் அட்டை உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் குறித்து பரதன் அளித்த புகாரின் பேரில் சிறுவாச்சூர் புறக்காவல் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்