தடுப்பு சுவரில் மோதி கார் கவிழ்ந்தது- சப்-இன்ஸ்பெக்டர் மகன் பலி; 4 பேர் படுகாயம்- கொட்டாம்பட்டி அருகே பரிதாபம்

கொட்டாம்பட்டி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்த விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மகன் பரிதாபமாக இறந்தான். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2023-10-19 01:46 IST

கொட்டாம்பட்டி,



கோவிலுக்கு சென்றனர்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46). இவர் திருவெற்றியூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் சுரேஷ், அவருடைய மனைவி லட்சுமிதேவி(44), மகன் சூர்யபிரகாஷ்(16), மகள் பிரித்திகா(20), மாமியார் சந்திரவதனம்(68) ஆகியோர் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக காரில் புறப்பட்டு வந்தனர். காரை சுரேஷ் ஓட்டினார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை அடுத்துள்ள திருச்சுனை விலக்கு அருகே நான்கு வழி சாலையில் வந்தபோது திடீரென நிலைதடுமாறிய கார், தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிறுவன் சூர்யபிரகாஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த கொட்டாம்பட்டி போலீசார், படுகாயம் அடைந்த சுரேஷ் உள்பட 4 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்