கார் கவிழ்ந்து விபத்து; தம்பதி காயம்

கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தம்பதி காயம் அடைந்தனர்.

Update: 2022-08-20 16:39 GMT

கயத்தாறு:

குமரி மாவட்டம் நாகர்கோவில் ராயல் நகரைச் சேர்ந்த மரியநாயகம் வர்கிஸ் என்பவரின் மகன் பெட்ரிக்சாது (வயது 43), இவருடைய மனைவி ஆர்த்திசோபியா (42) மற்றும் மகள் ஆகியோர் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். நேற்று காலை 6 மணிக்கு கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடி நாற்கரசாலையில் வரும்போது கார் திடீரென நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்