விழுப்புரம் அருகேகார் கவிழ்ந்து விபத்து2 பேர் காயம்
விழுப்புரம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் காயமடைந்தனா்.;
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் இருந்து நேற்று மாலை புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார், விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே குடுமியான்குப்பம் அரசு மாதிரி பள்ளி அருகே செல்லும்போது அங்கு சாலையோரம் குவிந்துக்கிடந்த ஜல்லிக்கற்கள் மீது ஏறியபோது எதிர்பாராதவிதமாக தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த புதுச்சேரி மேட்டுத்தெருவை சேர்ந்த வெங்கட் மகன் ரிஷி (வயது 19), புதுச்சேரி சின்னராயபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன் மகன் சசிதரன் (19) ஆகிய இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு வாகனத்தை வரவழைத்து விபத்துக்குள்ளான காரை அப்புறப்படுத்தினர்.