கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; நர்சிங் மாணவர் சாவு

கன்னியாகுமரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் நர்சிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2023-08-27 18:45 GMT

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதியதில் நர்சிங் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.

நர்சிங் மாணவர்

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் அச்சன்குளம் பகுதியை சேர்ந்தவர் ஐசக். இவருடைய மகன் ஜோனிஸ் (வயது 19). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஜோனிஸ் சொந்த ஊரான அச்சன் குளத்துக்கு வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஜோனிஸ் தனது நண்பர்களான செல்வன்புதூரை சேர்ந்த சுபாஷ் (23), அச்சன்குளத்தை சேர்ந்த சுபின் (19) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டார். மோட்டார் சைக்கிளை ஜோனிஸ் ஓட்டிச் சென்றார்.

கார் மோதி சாவு

கன்னியாகுமரி மகாதானபுரம் 4 வழிச்சாலை ரவுண்டானா அருகே சென்ற போது எதிரே கன்னியாகுமரியில் இருந்து அஞ்சுகிராமம் நோக்கி கார் வந்தது. இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளும், காரும் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த ஜோனிஸ், சுபின், சுபாஷ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜோனிசை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கும், சுபின், சுபாஷை நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ஜோனிஸ் பரிதாபமாக இறந்தார்.

சோகம்

இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நர்சிங் கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்