கார்-மோட்டார் சைக்கிள் மோதல்:குழந்தை உள்பட 5 பேர் படுகாயம்

கருங்குளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-03-28 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள நொச்சிகுளம் வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் ஆறுமுகம் (வயது 30). கூலிதொழிலாளியான இவர், மனைவி சந்தியா (22) மற்றும் மகள் சுவிந்தியா(2) ஆகியோருடன் கருங்குளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு ெசன்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. அந்த காரில் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது, அவரது மகன் ஷேக் அப்துல் காதர் (32) ஆகியோர் இருந்தனர். கருங்குளம் அருகே எதிர்பாராத விதமாக காரும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் சாலைஓரத்தில் ஓடி மின்கம்பத்தில் மோதி வயலில் இறங்கி நின்றது. இதில் மின்கம்பம் உடைந்ததுடன், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மோட்டார் சைக்கிளில் இருந்த ஆறுமுகம் உள்ளிட்ட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். காரில் இருந்த சேக் அப்துல்காதர், சாகுல் ஹமீது ஆகியோரும் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செய்துங்கநல்லூர் போலீசார் 5 பேரையும் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமணைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்