கார்-மோட்டார் சைக்கிள் மோதல்:கவுன்சிலர் உள்பட 2 பேர் படுகாயம்

தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கவுன்சிலர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-09-22 18:45 GMT

தேவதானப்பட்டியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 37). இவர், தேவதானப்பட்டி பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (35). இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் தேவதானப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெரியகுளத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஜெகநாதன் ஓட்டி சென்றார். பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில் பொம்மிநாயக்கன்பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது பின்னால் வந்த கார், இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் ஜெகநாதன், பெரியசாமி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்