கார் மெக்கானிக்-டீ மாஸ்டர் தற்கொலை

கார் மெக்கானிக்-டீ மாஸ்டர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-09-19 22:40 GMT

தா.பேட்டை:

கார் மெக்கானிக்

தா.பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவர் பஸ் நிறுத்தத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் முரளி(வயது 31), கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் முரளியின் பெற்றோர் கோயம்புத்தூருக்கு ஒரு விசேஷத்திற்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் முரளி தனியாக இருந்துள்ளார்.

நீண்ட நேரமாக வீட்டில் கதவு திறந்து கிடந்ததால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் முரளி பிணமாக தொங்கினார். இதுகுறித்து தா.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டீ மாஸ்டர்

இதேபோல் திருவானைக்காவல் நெல்சன் ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் (57) டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர் நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்