கார்- லாரி டிரைவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-28 21:12 GMT

கருப்பூர்:-

தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுனர்கள், அமைப்பு சாரா தொழிலாளர் தொழிற்சங்கம் உள்பட 10-க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து சேலம் கருப்பூர் சுங்கச்சாவடி அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலம் மேற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாநில கவுரவ தலைவர் சரவணன், மாவட்ட பொருளாளர் மாதேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் டிரைவரை தாக்கிய வட்டார போக்குவரத்து அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மேட்டூர் நகர தலைவர் தவசியப்பன், ஓமலூர் ஒன்றிய தலைவர் முத்துசாமி, சேலம் மாநகர் தலைவர் கர்ணமூர்த்தி உள்பட ஏராளமான கார், ஆம்புலன்சு, லாரி டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்