மோகனூரில்கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் தேரோட்டம்

Update: 2023-06-26 19:00 GMT

மோகனூர்:

மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில் தேர்த்திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினசரி காலை பல்லக்கு புறப்பாடு, திருமஞ்சனம், அன்னம், சிம்மம், அனுமந்த, பெரிய திருவடி, சேஷ, யானை, குதிரை வாகனங்களில் சாமி எழுந்தருளி வீதி உலா வரும நிகழ்ச்சி நடந்தது. 24-ந் தேதி திருக்கல்யாண உற்சவம், சாமி இந்திர விமானத்தில் வீதி உலா வருதலும் நடந்தது.

விழாவில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சாமி தேரில் ரதம் ஏற்றப்பட்டு காலை 9 மணிக்கு தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவில் வளாகத்தில் நிலை சேர்ந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீர், வசந்த உற்சவமும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் புஷ்ப யாகம், இரவு பெரிய திருவடி கருட சேவை நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்