மறைமலைநகர்: கார் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

மறைமலைநகரில் உள்ள போர்டு கார் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர்ந்து 7-வது நாளாக தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-06 04:03 GMT

வண்டலூர்:

சென்னையை அடுத்த மறைமலைநகரில் போர்டு கார் தொழிற்சாலை பல ஆண்டுகளாக இயங்கி வந்ததது. இந்த கார் தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த தொழிற்சாலையில் இருந்து ஏராளமான ஃபோர்டு கார்களை உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

பல ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த கார் தொழிற்சாலையை மூடுவதற்கு நிர்வாகம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலை மூடுவதை கண்டித்து ஊழியர்கள் கடந்த 7 நாட்களாக போர்டு கார் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தொழிற்சாலை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊழியர் ஒருவர் கூறுகையில்:-

பல ஆண்டுகளாக இயங்கிவரும் ஃபோர்டு கார் தொழிற்சாலையை நிர்வாகம் மூடக்கூடாது. உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அப்படியே தொழிற்சாலையை மூடினால் அதை நம்பி உள்ள ஊழியர்களுக்கு தமிழக அரசு வேறு தொழிற்சாலையில் பணி அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வேறுவழியின்றி தொழிற்சாலையை மூடினால் ஊழியர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து 7-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்