கார் டிரைவர் தற்கொலை

உத்தமபாளையத்தில் தூக்குப்போட்டு கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-16 18:45 GMT

உத்தமபாளையம் சந்தோஷ் தியேட்டர் பின்புறம் வசிப்பவர் முருகன் (வயது 42). கார் டிரைவர். இவரது மனைவி செல்வி. கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் முருகன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு முருகன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்