மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி கார் டிரைவர் பலி
கலவை அருகே மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி கார் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
கலவை
கலவையை அடுத்த மேலப்பழந்தை கிராமத்தை சேர்ந்த ரகுமான் கான் மகன் உமர் பாருக், கார் டிரைவர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் வேலையை முடித்துவிட்டு, கலவையில் இருந்து மேலப்பழந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார்.
பென்னகர் அருகே சென்றபோது நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதியது.
இதில் உமர்பாருக் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கலவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்து விட்டார்.
இதுகுறித்து வாழைப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.