கார் டிரைவர் தீக்குளித்து தற்கொலை

கன்னியாகுமரி அருகே மதுகுடித்து விட்டு தகராறு செய்ததை மகன் கண்டித்ததால் கார் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-08 21:34 GMT

நாகர்கோவில்:

கன்னியாகுமரி அருகே மதுகுடித்து விட்டு தகராறு செய்ததை மகன் கண்டித்ததால் கார் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கார் டிரைவர்

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 62). இவர் கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் வாடகை கார் டிரைவராக இருந்தார். இவருடைய மனைவி லதா. இவர்களுடைய மகன் வெங்கடேசும் கார் டிரைவர்.

முருகன் மதுகுடித்து விட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்றும் அதேபோல் மதுகுடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை மகன் வெங்கடேஷ் கண்டித்துள்ளார்.

தற்கொலை

இதில் மனமுடைந்த முருகன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துக் கொண்டார். இதனால் தீயின் கோரப்பிடியில் சிக்கி அலறினார்.

இதனை சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முருகன் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 62). இவர் கன்னியாகுமரி ெரயில் நிலையத்தில் வாடகை கார் டிரைவராக இருந்தார். இவருடைய மனைவி லதா. இவர்களுடைய மகன் வெங்கடேசும் கார் டிரைவர்.

முருகன் மதுகுடித்து விட்டு வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்றும் அதேபோல் மதுகுடித்து விட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனை மகன் வெங்கடேஷ் கண்டித்துள்ளார்.

தற்கொலை

இதில் மனமுடைந்த முருகன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன்னுடைய உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துக் கொண்டார். இதனால் தீயின் கோரப்பிடியில் சிக்கி அலறினார்.

இதனை சற்றும் எதிர்பாராத குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் முருகன் மீது பற்றி எரிந்த தீயை அணைத்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலும் இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்