கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

பாளையங்கோட்டையில் கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-02-27 19:04 GMT

பாளையங்கோட்டை தியாகராஜநகரை அடுத்துள்ள ராஜகோபாலபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாராஜன் (வயது 44). கார் டிரைவரான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தாராம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் ராஜகோபாலபுரத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றுவருவதாக சென்ற மகாராஜன் நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லையாம். இதனால் சந்தேகம் அடைந்த அவரின் குடும்பத்தினர் தோட்டத்துக்கு சென்று பார்த்த போது அங்கு மகாராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்