பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதம்
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதம் அடைந்தது.
அரியலூர்-செந்துறை சாலையில் மருத்துவக்கல்லூரி அருகே பொதுப்பணித்துறை மருதையாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை பலத்த காற்று வீசியதால் அலுவலக வளாகத்தில் இருந்த மரம் ஒன்று வேரோடு முறிந்து விழுந்தது. அப்போது அங்கிருந்த நிழற்குடையின் மீது மரக்கிளைகள் விழுந்ததால் கார் சேதம் அடைந்தது. இதையடுத்து, மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.