கனகம்மாசத்திரம் அருகே தரைப்பாலத்தில் கார் மோதி விபத்து; 4 பேர் படுகாயம்
கனகம்மாசத்திரம் அருகே தரைப்பாலத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.;
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 48). இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் டிரைவர் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான காரில் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
கனகம்மாசத்திரம் அடுத்த லட்சுமாபுரம் அருகே சென்ற போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி தரைப்பாலம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணித்த சரத்குமார், அவரது மனைவி பத்மாவதி மகள்கள் ஜனனிகவிப்ரியா, அக்ஷய்ப்ரியா ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். டிரைவர் லேசான காயங்களுடன் தப்பினார். படுகாயம் அடைந்தவர்களை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சரத்குமார் அளித்த புகாரின் பேரில் கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.