தடுப்புச்சுவர் மீது கார் மோதி ஒருவர் பலி

வாலாஜா அருகே தடுப்புச்சுவர் மீது கார் மோதி ஒருவர் பலியானார்.

Update: 2023-01-28 17:37 GMT

வாலாஜா அருகே நீலகண்டராயன் பேட்டை சோளிங்கர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் துர்கபிரசாத் (வயது 33) இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் தனக்கு சொந்தமான காரை ஓட்டிக்கொண்டு வாலாஜா -சோளிங்கர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து தரைப்பாலத்தில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த துர்கபிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்