ஸ்கூட்டர் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்

ஸ்கூட்டர் மீது கார் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-06-12 18:09 GMT

நொய்யல்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் சந்துரு (வயது 22). இவர் தனது ஸ்கூட்டரில் வேடசந்தூரில் இருந்து கொடுமுடி நோக்கி கரூர் -ஈரோடு நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது புன்னம்சத்திரம் பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளி பகுதியில் சாலையின் ஓரமாக பவுத்திரம் பிரிவு சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது, கொங்கு நகர் 3-வது கிராஸ் பகுதியை சேர்ந்த கதிரேசன் (33) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக சந்துரு ஸ்ட்டர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சந்துருவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி, காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கதிரேசன் மீது வழக்குப்பதிந்து, அந்த காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்