கார் மோதி வாலிபர் சாவு

கார் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்

Update: 2022-05-24 19:05 GMT

பணகுடி:

கள்ளிகுளத்தை அடுத்த சவுந்திரபாண்டியபுரத்தை சேர்ந்த அருள் செல்வன் மகன் ஞான மார்சலின் (வயது 28). டிப்ளமோ பட்டதாரி. மும்பையில் வேலை பார்த்த இவர், கடந்த ஒரு ஆண்டு முன்பு சொந்த ஊருக்கு வந்து வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மதியம் தனது மோட்டார் சைக்கிளில் கானாவூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக ஞான மார்சலின் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஞான மார்சலின் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்