கார் மோதி மூதாட்டி பலி

கார் மோதி மூதாட்டி பலியானார்.

Update: 2022-06-10 17:53 GMT

மீன்சுருட்டி 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை நடுத்தெருவை சேர்ந்தவர் சாரங்கபாணி. விவசாயி. இவரது மனைவி சூடாமணி (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு விருந்துக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது ஊருக்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலையை கடந்தார். அப்போது ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்த ஒரு கார் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு நோக்கி சென்றபோது சூடாமணி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து மீன்சுருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூடாமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்