லாரி மீது கார் மோதல்; வங்கி பெண் ஊழியர்கள் 3 பேர் காயம்

பணகுடியில் லாரி மீது கார் மோதிய விபத்தில் வங்கி பெண் ஊழியர்கள் 3 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-02-22 21:46 GMT

பணகுடி:

பணகுடி நான்கு வழிச்சாலை நெருஞ்சி காலனி அருகே நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரியை நோக்கி சரக்கு ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற சொகுசு காரில், வங்கி ஊழியர்களான மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஆனந்தராஜா மனைவி வினோஷா (வயது 31), புன்னக்காட்டுவிளையை சேர்ந்த ரீகன் ஜோஸ் மனைவி அஜா எமிபா (30), கருங்கல் பகுதியைச் சேர்ந்த செல்வின் மகள் காட்வினோ கிரேஸ் (29) ஆகியோர் நெல்லையில் நடந்த மாதாந்திர வங்கி கூட்டத்தில் பங்கேற்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

காரை மேற்க்கோடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (46) என்பவர் ஓட்டிச் சென்றார். பணகுடி நான்கு வழிச்சாலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக சரக்கு லாரியின் பின்பகுதியில் கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்