சிவகாசி,
சிவகாசி-நாரணாபுரம் ரோட்டில் உள்ள முருகன் காலனியை சேர்ந்த பெரியநாயகம் மகன் செல்வம் (வயது 27). இவர் தனது நண்பர் வினோத்குமார் (28) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சிவகாசி-வெம்பக்கோட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் செல்வம் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் செல்வம், வினோத்குமார் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் செல்வம் பரிதாபமாக இறந்தார். காயத்துடன் உயிர் தப்பிய வினோத்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பெரியநாயகம் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.