சென்னை வண்டலூரில் கார் மோதி விபத்து: தாய், மகள் உயிரிழப்பு
சென்னை வண்டலூரில் கார் மோதிய விபத்தில் சிக்கி தாய், மகள் ஆகியோர் உயிரிழந்தனர்.
சென்னை,
சென்னை வண்டலூரில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி தாய் உமா மகேஸ்வரி, மகள் கிருத்திகா ஆகியோர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் மேம்பால இறக்கத்தில் சென்ற போது விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.