மொபட் மீது கார் மோதி 2 பேர் படுகாயம்

மொபட் மீது கார் மோதி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2023-03-12 18:04 GMT

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை அங்கு வேலைக்கு துறைமங்கலத்தை சேர்ந்த சிவக்குமார், தேவிகா ஆகியோர் மொபட்டில் வந்துள்ளனர். அப்போது சிவகங்கையில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் சிவக்குமாரும், தேவிகாவும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்