லாரி மீது அமரர் ஊர்தி மோதல்-3 பேர் காயம்
லாரி மீது அமரர் ஊர்தி மோதிய விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜியாவுதீன் (வயது 43), கண்டாச்சிபுரம் அருகே ஒதியத்தூர் அப்துல்அஜிஸ் (19) ஆகிய இருவரும் ஒதியத்தூர் ஷாஜகான் என்பவரின் அண்ணி ஜெரினாபேகத்தின் உடலை ஒரு அமரர் ஊர்தியில் ஏற்றிக்கொண்டு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்றனர்.
விழுப்புரம் முத்தாம்பாளையம் புறவழிச்சாலை அருகில் வந்தபோது முன்னால் சென்ற லாரியின் மீது எதிர்பாராதவிதமாக அமரர் ஊர்தி மோதியது. இந்த விபத்தில் ஜியாவுதீன், அப்துல்அஜிஸ் மற்றும் அமரர் ஊர்தி டிரைவரான சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த கவுதம் (31) ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். உடனே அவர்கள் 3 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.