கார்-சரக்கு வேன் மோதல்; ஆசிரியர் படுகாயம்

வந்தவாசியில் கார்-சரக்கு வேன் மோதிக்கொண்டதில் ஆசிரியர் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-02-05 15:57 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 59), அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், வந்தவாசி- காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் தென்னாங்கூர் கிராமம் அருகே காரில் வந்த போது திடீரென அந்த வழியாக வந்த சரக்கு வேனும், காரும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் சண்முகம் படுகாயம் அடைந்தார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்