திம்பம் மலைப்பாதையில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதல்

திம்பம் மலைப்பாதையில் கார்-பஸ் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

Update: 2022-06-25 22:11 GMT

தாளவாடி

ஈரோட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு 45-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. நேற்று காலை திம்பம் மலைப்பாதையின் 20-வது கொண்டை ஊசி வளைவில் பஸ் திரும்பிய போது எதிரே கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி ஒரு கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. நல்லவேளையாக காரில் வந்த 2 பேருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்